4 Oct 2021

காவ்ய சஸ்த்ரா: இந்திய எழுத்தாளர்களும் தேசிய மொழி இலக்கியமும்

காவ்ய சஸ்த்ரா:  இந்திய எழுத்தாளர்களும் தேசிய மொழி இலக்கியமும் (2021)

KAVYA SASTRA என்பது சகோதரர் உதயசங்கர் எஸ் பி-யின் கடும் உழைப்பில் வெளிவந்த ஒர் அற்புதமான புத்தகமாகும்.

தேசிய மொழி இலக்கிய எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்ட நம் எழுத்தாளர்களைப் பற்றிய பல ஆழ்ந்த அறிவியல் ஆய்வுகள், தேடல்கள், அறிக்கைகள், அச்சு ஊடகங்களிலிருந்து பெறப்பட்ட பல தகவல்கள், ஓன் லைன் இணையத்தின் வழி நேரடி தொடர்புகள் என அதிகபட்சமான Paper work அவர் செய்துள்ளார் என்பதை KAVYA SASTRA-வை படிக்கும் போது நாம் புரிந்துக் கொள்ளலாம்!

தேசிய மொழி இலக்கிய எழுத்துத்துறையில் நம்ம எழுத்தாளர்களும் ஜாம்பவான்கள் என்பதை இதனை வாசிக்கும் போது நாம் உணர்ந்து கொள்ளலாம்.

1960-களிருந்து இன்றுவரை (2021) தேசிய மொழி இலக்கிய எழுத்துத்துறையில் நம்ம எழுத்தாளர்களின் ஈடுபாடு அல்லது பங்களிப்பை பற்றி அவர் புத்தகமாக செதுக்கி உள்ளார்!

வாங்கி படித்துப் பாருங்கள், அதில் பல தகவல்கள் ... பல சுவாரசியங்கள் நமக்காக காத்திருக்கிறது!

Mahesvaran Mathavarayan @ Mad Sentul (Kapar, Selangor)

காவ்ய சஸ்த்ரா தகவல் — [இங்கே]