முனிவர் விக்ரமனைத் தேடி பல மாங்கனி கொடுத்தது போல, உதயசங்கர் எஸ்.பி வாசகர்களைத் தேடி Vetalam dan Vikramaditya (2020) எனும் தேசிய மொழி புத்தகத்தைக் கொடுத்தார்.
மாங்கனி பொன்னாக மாறியது போல், இப்புத்தகம் அறிவுக்கு விருந்தாக அமைந்தது. விக்ரமன் ஓடி ஓடி வேதாளத்தைப் பிடித்தது போல், நானும் நேரத்தைத் தேடி தேடி இப்புத்தைகத்தை வாசித்து முடித்தேன்.
புத்தகம் வாசித்து முடித்தப் பிறகே, பல வருடமாக உண்மையென்று எண்ணியிருந்த கருத்துகள் பிழையென்று தெளிவுபெற்றேன். இப்படி பலர் என்னைப் போலவே இக்கதையைப் பற்றி பல தவறான கருத்துக்களையும் எண்ணங்களையும் கொண்டிருக்கலாம்.
அவை அனைத்தும் தவறு. முனிவர் எதற்கு வந்தார், வேதாளத்தை எதற்காக கேட்டார், வேதாளம் எதற்குக் கேள்விகள் கேட்டது என்று இப்புத்தகம் வாசித்தப் பின்னே தெரியவரும்.
[Lihat — Senarai Buku Uthaya]
ஆம், இக்கதையில் வேதாளம் பலமுறை விக்ரமனிடம் ஒரு கதையைக் கூறி, அதன் தொடர்பாக ஒரே ஒரு கேள்வி கேட்கும். வேதாளம் கூறும் கதைகளும், அது கேட்கும் கேள்விகளும், நம் அனைவரையும் சிந்திக்க தூண்டும்.
சிந்திப்பதோடு நிறுத்திவிடாமல், அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டால், மனிதர்களின் வாழ்க்கை சிறப்புபெறும்.
[Ulasan ini ditulis
oleh Murali Mohan bagi Pertandingan Menulis Ulasan Buku yang dikendalikan
oleh Uthaya Sankar SB semasa Perintah
Kawalan Pergerakan dilaksanakan di seluruh negara.
Pengulas menerima senaskhah novel Hanuman: Suara Hati sebagai tanda
penghargaan. Baca juga — Ulasan M. Mahendran]