26 Dec 2011

தீபாவளி அல்லது மறுமலர்ச்சி

என்னைச் சீக்கிரம் கொலை செய்து விடு. இல்லையென்றால் நான் எப்பொழுதும் வேட்டையாடுவதோடு கொலை செய்து விடுவேன். தீபாவளிக்குள் மக்கள் மனதில் தெளிவு பிறந்து விட்டது. இனிமேல் உன்னை யாரும் கொண்டாட மாட்டார்கள். ஆனால் கர்ணனைக் கொண்டாடுவார்கள்.

நீ கர்ணனைப் பலவீனமாக்கப் பயன்படுத்தியத் தந்திரங்களை மறந்திருப்பது சாத்தியமற்றது. ஆமாம்.. உன்னை வெற்றிகரமாக வேட்டையாடிய பிறகு அச்சம்பவத்தை நிறைய தடவையல்லவா நான் கூறியிருக்கிறேன்!


உன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. பரவாயில்லை, இன்னும் சிறிது நேரத்திற்கு அவர்கள் உன்னை வணங்கட்டும். பரவாயில்லை.. காலை, மதியம் அவர்கள் உன்னை வழிபடட்டும். பரவாயில்லை, அவர்கள் உன்னைப் பற்றிய புராணங்களை உருவாக்கட்டும். அது அவர்களின் உரிமை. வழிபடும் நபரின் உண்மையான விவரங்களைக் கண்டறியாத உரிமைகள்.


அல்லது உன்னுடைய உண்மையான சாம்பல் நிறத்தை ஏற்க விரும்பாத மக்கள் அவர்கள். அவர்கள் வெள்ளையை மட்டுமே பார்க்கிறார்கள். கருப்புக் கூட வெள்ளையாக்கப்படுகிறது. இதில் சாம்பல் ஏது!


எனக்கு உன்னுடைய கவசமும் குண்டலமும் வேண்டும்.”


இவ்வாறே நீ கர்ணனிடம் கேட்டாய். அந்த முட்டாளும் உன்னை மன்னித்தான். அவன் சந்தித்த ஏழையான நீ, நன்றாக வேடமிட்டு நடிப்பாய் என்று அவன் அறவே உணரவில்லை.


நீ தர்மம் செய்பவன் என்று எனக்குத் தெரியும். ...”


நிறைய கேள்வி கேட்காமல், கர்ணன் உடனே கத்தியை எடுத்து அந்தக் கவசத்தையும் குண்டலத்தையும் அறுத்தான். உன்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தோ! பிறந்ததிலிருந்து உடலில் இணைக்கப்பட்டிருக்கும் கவசத்தையும் குண்டலத்தையும் அறுக்கச் சொல்லி எப்படி அந்தப் போர்வீரனிடம் கேட்க உனக்கு மனம் வந்தது.


ஆனால், வியப்பதற்கு ஒன்றுமில்லை. நீ தந்திரங்கள் செய்வதில் உண்மையிலே வல்லுநர் அல்லவா? உன்னுடய நோக்கம் உன்னைச் சார்ந்த தரப்பினருக்கு வெற்றி கிடைக்கச் செய்வது மட்டுமே ஆகும். மற்ற எதையுமே நீ சட்டை செய்வதில்லை.


இந்தத் துணிச்சலான வெளிப்பாட்டைக் கேட்டு நீ கோபமடைந்து விட்டாயா?


! என்னை வேட்டையாடு. கோழையான போர்வீரனே, என்னைக் கொன்றுவிடு. இல்லையென்றால், கடந்த காலக் கதையைச் சொல்லி உன்னைத் தொடர்ந்து நான் வேட்டையாடுவேன். நான் மீண்டும், மீண்டும், மீண்டும், தொடர்ந்து உன்னுடைய அனைத்துக் கருப்புப் பக்கங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே இருப்பேன். அதைக் கேட்டு உன்னுடைய காதுகள் வலிக்கட்டும், பரவாயில்லை. உனக்கு வெட்கப்பட தெரியட்டும், பரவாயில்லை.


உன்னுடையத் திட்டம் நிறைவேற, தாயுக்கும் மகனுக்கும் உள்ள அன்பை நீ பயன்படுத்திக் கொண்டாய். நீ குந்தி தேவியிடம் கர்ணன் உண்மையில் யார் என்பதைப் பற்றி அம்பலப்படுத்தி விட்டாய்.


Diffuse to two-shot.


என்ன? முன்பு நான் ஆற்றில் மிதக்க விட்டக் குழந்தையா அவன்?”


ஆமாம். அவன்தான் நீ மறைக்க முயன்ற பாவம் ...”


நான் நிர்பந்தப்படுத்தப்பட்டேன்,” குந்தி தேவி புகார் கூறினாள். “அந்தக் குழந்தை நான் திருமணம் செய்யும் முன்னரே பிறந்தது. காலச் சூழ்நிலைக்கேட்ப நான் அக்குழந்தையை வீச வேண்டிய கட்டாயம்.”


ஆனால், இப்பொழுது உன்னுடைய முறையான குழந்தைகளை அழிப்பதற்கு அக்குழந்தைக் கர்ணனாக உருவெடுத்துள்ளது. அர்ஜூனனைக் கொலைச் செய்துவிடுவதாகக் கர்ணன் சபதம் செய்துள்ளான்.”


அய்யோ! என் விதி எத்துணை துரதிருஷ்டமானது. நான் என்னச் செய்வது?”


உடனே நீ குந்தி தேவியிடம் கர்ணனைப் பார்க்குமாறு கூறினாய். கர்ணனைப் பார்க்கும் பொழுது என்னச் செய்ய வேண்டும் என்று குந்தி தேவியிடம் நீ கற்றுக் கொடுத்தாய். நீ கற்றுக் கொடுத்ததுப் போல, குந்தி, கர்ணனிடம் அர்ஜூனுடன் பிறந்த மற்ற நான்கு சகோதரர்களையும் கொல்ல முயற்சிக்க வேண்டாமென்று சத்தியம் வாங்கினாள். கர்ணனும் அர்ஜூனை நோக்கி ஒன்றுக்கு மேற்பட்ட முறை, மாய அம்புகளைத் தொடுப்பதில்லை என்று சத்தியம் செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டான்.


இதுவல்லவா உன் திட்டம்? இதன் வழியல்லவா நீ கர்ணனை வெற்றிகரமாகப் பலவீனப்படுத்தினாய்?


Dissolve to flashback.


போர்களத்தில், கர்ணன் தொடுத்த மாய அம்பு அர்ஜூனனின் கிரீடத்தில் மட்டுமே பட்டது. அதனால், கர்ணனின் கையில் சாக வேண்டிய விதியிலிருந்து அர்ஜூனன் தப்பினான்.


ஆனால், நீ அதோடு மட்டுமா நின்றாய்? கர்ணனுடன் பிறந்த கவசத்தையும் குண்டலத்தையும் பறித்தவுடன் நீ திருப்தி அடைந்தாயா? அல்லது அர்ஜூனனின் உயிரைக் காப்பாற்றிய பிறகு திருப்தி அடைந்தாயா?


கர்ணன் தயார் நிலையில் இல்லாதப் பொழுது, அர்ஜூனனை அம்பு எய்த தூண்டினாய். அதுவும், அப்பொழுது கர்ணனின் தேர்ச் சக்கரம் நிலத்தில் மாட்டிக்கொண்டது. அப்பொழுது கர்ணனின் ஆயுதங்கள் பறிக்கொடுத்த நிலையில் அவன் தேரைத் தள்ள முயற்சித்த நேரம்.


இன்னும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? இன்னும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?


காலத்தால் நீ மறந்திருப்பாய். நான் உன்னுடன் இருக்கும் வரை நீ எவ்வாறு மறந்திருப்பாய்? நீ கர்ணனுக்குச் செய்த இழிவானச் செயலால் நான் உன்னை எவ்வாறு நினைக்காமல் இருப்பது. அதுதான் என்னுடைய நோக்கம் இப்பொழுது.


(Insert comic relief: 45 sec.)


(© Karya: Uthaya Sankar SB 1998. © Terjemahan: Shanmila Lingamoorthy 2011. Petikan ini diterjemahkan daripada cerpen “Diwali @ Maru Malarchi” yang tersiar di ak hbar Mingguan Malaysia pada 2 Ogos 1998 dan dimuatkan dalam kumpulan Rudra Avatara pada 2008.)