22 Dec 2011

ருத்ர அவதாரம்

“உண்மை மற்றும் கற்பனைக்கு இடையேயும், பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவில்லாதவற்றிற்கிடையேயும், புனைகதை மற்றும் அறிவியலுக்கிடையேயும், தருக்கம் மற்றும் தர்க்கம் இல்லாதவற்றிற்கிடையேயும் உள்ள எல்லைகள் எங்கே?”

நேரம் தாமதிக்காமல் என் பதிலைக் கூறுவதற்குமுன், கண்டன் தன் வலது புறத்தலை அருகே கையை வைத்துக் கொண்டு சுட்டிக்காட்டியபடியும் பிறகு மூக்கைப் புரட்டி மடித்தவாறு இருந்தான்.


* * * * *


அப்பொழுது, என் மனைவி ஐந்தரை மாத கர்ப்பிணிப் பெண். அவள் வயிறு பெரிதாகவில்லை. ஆதலால், அவள் கர்ப்பிணிப் பெண்கள் அணியும் உடையை அணியவில்லை. எனக்கோ அந்த உடைகளைப் பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் ஓர் ஆசை. ஆகையால், நான் என் மனைவிக்கு அந்த உடைகள் சிலவற்றை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அவள் அதனை அணிய மறுத்துவிட்டாள்.


இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த உடைகளை அணியச் சொல்லி எத்தனையோ முறை அவளிடம் கெஞ்சி சம்மதிக்க வைக்க முயன்றேன். ஆனால், அவளோ அதற்கு வெட்கமாக இருக்கிறது என்று கூறி தன் உள்ளங்கையால் முகத்தை மூடிக் கொண்டாள்.


அன்று 9 ஜூன் 2000. அவள் நான் வேலை செய்யும் தனியார் மருத்துவமனைக்கு வேலை செய்யும் பொழுது என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு அவளுக்கு உடம்பு சரியில்லையென்றும் தன் உடலில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருப்பது போல உணர்வதாகக் கூறினாள். நான் அவளை உடனடியாகக் கிளம்பி நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு வரச் சொன்னேன். ஏனென்றால், இதுவே எங்களின் முதல் குழந்தை.


ஆகவே, அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் உறுதி செய்து கொண்டேன். பிறகு நான் அவளுக்குச் சில சோதனைகளை மேற்கொண்டேன். பரிசோதனைத் திரையில் அவள் கூறியபடி பாதிப்பு தொடர்பான எந்தவொரு காட்சியும் இல்லை.


உடனே நான் அவளிடம்,அனைத்தும் நன்றாகவே உள்ளனஎன்று கூறினேன். “உனக்கு வேண்டுமென்றால் நான் உன் இடுப்புப் பரிசோதனையை மேற்கொள்கிறேன்” என்றேன்.


இடுப்புப் பரிசோதனையில் இடுப்பு எழும்புகள் விரிவடைந்திருப்பதைக் கண்டு எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. இவை, குழந்தை இறந்து பிறக்கும் அல்லது குறை மாதக் குழந்தையாகப் பிறக்கும் என்பதையே குறிக்கும் அறிகுறி! இடுப்புப் பரிசோதனை முடிவை என் மனைவியிடம் கூறிய பொழுது அவளும் அதிர்ச்சியடைந்தாள். நான் உடனே அவளை அமைதிப்படுத்தினேன். நான் அவளுக்கு மருந்து கொடுத்துவிட்டு அவளை டாக்சியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பினேன்.


மறுநாள் பரிசோதனையில், என் மனைவியிடம் ஒவ்வொரு நிமிடமும் கழித்து வழக்கமாகக் காணப்படும் பாதிப்புகளைக் காணும் போதெல்லாம் எனக்குச் சங்கடமாக இருந்தது. என்னதான், கடந்த ஆண்டில் டஜன் கணக்கில் பிறந்த குழந்தைகளின் பிறப்பைக் கொண்டாடினாலும், என் மூத்த குழந்தையின் பிறப்பைக் கொண்டாட தயாராகவே இருந்தேன். என்னால் உண்மையாக இதனை நம்ப முடியவில்லை. ஏனெனில், என் மனைவி கர்ப்பமாகி இப்பொழுதுதான் இருபத்து இரண்டு வாரங்களே ஆயிற்று.


அன்று பிரசவ அறையில், என் மூத்த குழந்தையின் பிறப்பை மகிழ்ச்சியாகக் கொண்டாடினேன். நான் எதிர்பார்த்ததுப் போலவே எனக்குப் பிறந்த குழந்தை பிரசவத்திற்குப் போதுமான மாதங்கள் பற்றாமல் அதாவது குறைமாதக் குழந்தையாகப் பிறந்து மற்றும் 336 கிராம் மட்டுமே எடையுள்ள குழந்தையாகப் பிறந்தது. குழந்தையின் உடல் மிகவும் சிறியதாகக் காணப்பட்டது. அந்த சிறிய உடலைத் தூக்கினால் என் கைகளில் .குழந்தையின் முகம் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்பட்டது மற்றும் உடல் முழுவதும் வெள்ளை நிற முடிகளாக இருந்தன.


இந்தக் குழந்தை உயிர் பிழைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லைஎன்று மூத்த மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார். “தொழில்நுட்பரீதியாகப் பார்த்தால் குழந்தை கருவில் இருந்திருக்கவேண்டும். குழந்தை பிறக்கக் குறித்து வைத்தப் பிறந்த தேதியிலிருந்து மூன்று அல்லது இருபத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு பிறந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், இந்தக் குழந்தை இருபத்து இரண்டே வாரங்களில் பிறந்துள்ளது! என்னை மன்னியுங்கள், இந்த குழந்தையைக் காப்பாற்றுவது மிக மிக கடினமாகும்.”


ஆனாலும், நானும் என்னும் மனைவியும் எங்கள் குழந்தை நிச்சயமாகத் தொடர்ந்து உயிர் வாழும் என்று முழுமையாக நம்பிக்கை கொண்டோம். எங்கள் குழந்தை, பிராணவாயு கூடாரத்தில் வைக்கப்பட்டு, குழந்தைக்கு உடனடியாகத் தீவிர சிகிச்சை வழங்கபட்டது. மருத்துவ செலவு எவ்வளவானாலும் நான் கவலைப்டமாட்டேன். எங்களின் குழந்தை தொடர்ந்து உயிர் வாழ்வதே போதும் என்று இருந்தேன்.


தனியாக அழுதுகொண்டிருக்கும் என் மனைவியை நோக்கிபாலகண்டன்என்றேன். “ஆம், நமக்கு பிறந்த குழந்தைக்கு மறைந்த கண்டனின் நினைவாக நம் குழந்தைக்குப் பாலகண்டன் என்று பெயர் சூட்டியுள்ளேன். உனக்கு சம்மதமா?”


என் மனைவி என் கரங்களைப் பிடித்துக்கொண்டு புலம்பியவாரே இருந்தாள்.


அந்த பெயர் உனக்கு சம்மதம் தானே? பாலகண்டன் பிழைப்பான். ... நிச்சயமாக உயிர் பிழைப்பான்.”


ஒரு தகுதிப் பெற்ற மருத்துவர் என்ற முறையில், மருத்துவ சிகிச்சையில் பாலகண்டன் தொடர்ந்து உயிர் வாழ வாய்ப்பே இல்லை என்பதை நான் நன்கு தெரிந்துகொண்டேன். அவன் தொடர்ந்து உயிர் வாழ விதி இருந்தாலும், பிரசவத்திற்குப் போதுமான மாதங்கள் பற்றாமல் குறை மாதக் குழந்தையாகப் பிறந்ததால் அவனுக்கு உடல் ஊனம் ஏற்படும். அல்லது, அவனுக்கு மூளையில் கடுமையான பாதிப்பும் ஏற்படும் என்றும் எனக்குத் தெரியும்.


எனக்கு இந்த குழந்தை வேண்டும்!” என்று என் மனைவி கண்ணீருடன் கூறினாள். “தயவு செய்து என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்”.


எனக்கும் பாலகண்டன் உயிர் பிழைக்க வேண்டும். பாலகண்டன் நிச்சயமாக உயிர் பிழைப்பான் என்று மனதிலிருந்து ஒரு அப்பாவின் குரல் என்னை நம்பவைத்தது.


அது பாலகண்டனின் குரலா?


(Terjemahan Tamil © Khulalhalini Serastalin 2011. Petikan cerpen di atas diterjemahkan daripada cerpen “Rudra Avatara” karya Uthaya Sankar SB yang mula-mula disiarkan di majalah Dewan Sastera, Januari 2005 sebelum dimuatkan dalam Rudra Avatara. Sila KLIK DI SINI untuk senarai lengkap cerpen dan sila KLIK DI SINI untuk bahan Bahasa Tamil.)