நான் தலையை மட்டும் இலேசாக அசைத்து வைத்தேன்.
"சுப்பம்மா அந்த மூன்று வயது குழந்தைய நாலு மாசத்துக்கு பாத்துகிறதா ஒத்துக்கிட்டா," திக் கியோங் தொடர்ந்தான்.
"என்ன காரணம் ... யார் ... அந்த ... கனகா என்ன காரணத்துக்காக அவளோட பையன அந்த விலைமாது கிட்ட கொடுத்தா?"
"குடும்ப பிரச்சன. அப்படித்தான் கோர்ட்ல விசாரணையின் பொது சொல்லியிருந்தா." சூடாக இருந்த தேநீரை மீண்டும் அருந்தியவாரே திக் கியோங் தொடர்ந்தான். "இருக்கட்டும், ஆனா உனக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் இந்த கேஸ்ல? வக்கீலாக போறியா என்ன?"
தற்பொழுது தனிமைபடுத்தபட்ட தாவர ஆய்வாளராக இருக்கும் என் நெடுநாள் நண்பனின் நகைப்பான கேள்விக்கு நான் சற்றே புன்னகைத்தேன்.
"நீ பிரைவேட் டிடேக்டிப் ஆனா கூட அது இப்ப வேலைக்கு ஆகாது."
நகைப்புடன் கூடிய சிறு சிரிப்புடன் எனது இடப்பக்க தோள் பட்டையை தோழமையாக தட்டினான் திக் கியோங்.
"தயவு செய்து கொஞ்சம் விளையாடாம இரு தியாவ். நான் ரொம்ப டெஸ்பெறேட்டான நிலமையில இருக்கேன். உன்ன விட்டா இதப்பத்தி கேக்குரத்துக்கு எனக்கு வேற ஆளும் இல்ல."
"சரி, சரி. உனக்கு அந்த குழந்தை வதை கேஸ்ஸ பத்தி வேற என்ன தெரியனும்?"
"ம்ம்...." கடந்த இரு தினங்களாக என்னால் குறிப்பெடுக்க இயன்ற அந்த சிறு குறிப்பை சிறுபார்வையிட்டேன். "பெரியசாமிக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?"
"அவன் வேல வெட்டி ஏதும் இல்லாதவன். சுப்பமாவ கடந்த 1988-ல இருந்து அவனுக்கு தெரியுமா. அப்புறம் அவன் அவளோட இலவசமான வாடிக்கையாளரா ஆயிட்டான். ம்ம்... அவன் ஒரு ஹெராயின் பித்தனும் கூட. சுப்பமாவோட பிள்ள ரமேஷினா அவனுக்கு ப்ரியம். பெரியசாமியும் சுப்பம்மாவும் கடந்த ஏப்ரல்ல இருந்து ஒன்னாதான் தங்கி இருக்காங்க."
தியாவ் திக் கியோங் விவரித்த அனைத்தையும் சிதறாமல் குறிப்பெடுத்துக்கொண்டேன்.
"பெரியசாமி சின்னபையாவ கொடுமைபடுத்தி இருக்கான்."
"அது தேவையில்ல." நான் இடைபுகுந்தேன், "வழக்கு விசாரணையோட முடிவப்பத்தி சொல்லு."
"வெல், எதிர்தரப்புல இருந்து பதினாறு பேரையும் சொந்த தரப்புல இருந்து மூணு பேரையும் விசாரிச்சப் பிறகு, நீதிபதி டத்தோ மன்சூர் அப்துல்லா பெரியசாமிக்கு மரணதண்டனன்னு சொல்லி தீர்ப்பு எழுதிட்டார்."
"செக்க்ஷேன் 302 வதை சட்டம்?"
"ஆமா."
"ஹ்ம்ம்." நான் சற்றுமுன் குறிப்பென எழுதிய அக்கிருக்களுக்குள் என் கவனத்தை செலுத்தினேன். "மேல் முறையீடு எதாவது?"
"அவன் தரப்பு வக்கீல் ஜுல்பிகர் நாடர் அலி உச்ச நீதிமன்றத்துல முறையீடு செஞ்சாரு ஆனாலும் தீர்ப்புல எந்த மாற்றமும் இல்ல."
தேநீரை நாங்கள் அருந்தி முடிக்கும் பொழுது அது ஆறியிருந்தது.
"இப்போதைக்கு இது போதும். ரொம்ப நன்றி."
ஐந்து வருடங்களுக்கு முன் டாருள் ரிட்வான் இடைநிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் பயின்ற திக் கியோங்கிடம் விடைப்பெறும் நிமித்தம் என் வலது கரத்தை நீட்டினேன்.
"உனக்கு ஒன்னு தெரியுமா," தியாவ் திக் கியோங் நின்று என் கரத்தை பற்றியவாறே வினவினான், "உனக்கு இந்த கேஸ பத்தி எதுவும் தெரியாது, ஆனா நீ விசாரிக்கிற விதம் இந்த கேஸ்ஸ மறு விசாரணைக்கு கொண்டுவராம விட மாட்ட போலயிருக்கே."
நான் நம்பிக்கை பூண்ட சிறு புன்னகையுடன் என் சுசுகி விதாராவை நோக்கி நடந்தேன்.