14 Oct 2021

காவ்ய சஸ்த்ரா, ஓர் அறிமுகம்

நண்பர் உதயசங்கர் எஸ்.பி எழுதியுள்ள காவ்ய சஸ்த்ரா: இந்திய எழுத்தாளர்களும் தேசிய இலக்கியமும் (2021) என்கிற இந்த புத்தகத்தில் என்னவெல்லாம் உள்ளது என்பதை குறிப்பிடத்தான் இங்கே ஒரு சிறு அறிமுக பதிவு செய்ய உள்ளேன்.

நண்பரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். காரணம் பலரும் அவரை அறிந்து வைத்திருப்பீர்கள். தேசிய மொழி எழுத்துத் துறையில் அவர் ஒரு ஜாம்பவான். அவரின் எழுத்தின் மூலமாக பல சர்ச்சைகள் உருவானது. அவர் அதற்கெல்லாம் பயப்படுபவர் அல்ல. எதையும் அவர் தனி நபராக நின்று சமாளிக்க கூடியவர்.

மலாய்க்காரா எழுத்தாளர்கள் அவரின் தேசிய மொழி எழுத்தின் ஆற்றலைக் கண்டு வியந்து போய் உள்ளனர். தேசிய மொழி எழுத்துத்துறையில் அவரை அசைக்க அங்கும் யாரும் இல்லை! அங்கே அவர் தனிச்சே செயல்படுகிறார்.

தேசிய மொழியை யாராவது பிழையாகவோ அல்லது தப்புத்தப்பாக எழுதியிருந்தீர்களேயானால் ... அவ்வளவுதான், சம்பந்தப்பட்டவரை (எந்த இனத்தவர் என்று பாராமல்) உடனே அழைத்து திருத்தம் செய்யுமாறு கட்டளையிடுவார். இந்த விசயத்தில் மலாய்க்காரர்களே அவரிடம் அடிக்கடி மாட்டிக்கொள்வார்கள். இதன் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் மொழி விசயத்தில் அவரிடத்தில் மிக கவனமாகவே இருப்பார்கள்.

அவரின் படைப்புகள் அனைத்தும் தேசிய மொழியில் இருந்தாலும் ... அவர் கையொப்பம் (signature) இடுவதுஉதயாஎனும் தமிழில்தான்!

Kumpulan Sasterawan Kavyan எனும் மலாய் அல்லாதவரை தனது இலக்கிய குழுவில் இணைத்துக்கொண்டு பல தேசிய மொழி இலக்கிய நிகழ்வுகளை நடத்தி உள்ளார் அவர். மாதந்தோறும் அவர்கள் ஏதாவது ஓர் இலக்கிய நிகழ்வில் பிஸியாகவே இருப்பார்கள். அதில் அங்கம் வகிக்கும் நம்ம இளம் எழுத்தாளர்காளின் எண்ணிக்கை அதிகமே!

வழவழப்பான அட்டையில் அழகான டிசைனில் காவ்ய சஸ்த்ராவின் முன் பக்கம். — எம். மகேஸ்வரன்

சரி, இனி நாம் காவ்ய சஸ்த்ரா-விற்கு செல்வோம். இதில் :

** அன்றைய நவீன மலாய் மொழி இலக்கிய சகாப்பத்திலிருந்து (நவீன இலக்கிய தந்தை Munsyi Abdullah) இன்றைய நவீன தேசிய மொழி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ள ஆளுமைகளான இந்திய முஸ்லிம்களையும் மறந்திடாமல் Kavya Sastera-வில் குறிப்பிட்டுள்ளார்.

** 1970-களில் நம் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளை தேசிய மொழியில் மொழி பெயர்ப்பு வேலைகள் செய்ததாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மேற் கொண்டதாகவும், பின்பு அச்சங்கத்தின் உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்பினால் அதனை கைவிடப்பட்டதாவும் என்ற தகவலையும் இதில் குறிப்பிட்டுள்ளார்.

** GAPENA (Gabungan Persatuan Penulis Nasional Malaysia) வுடன் இணைந்து இலக்கியச் சேவையை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் செயல்படப் போவதாகவும், அதன் பின்பு அந்த இயக்கத்துடன் இணைந்து செயல் படமால், தனிச்சையாகவே செயல் படப்போகிறோம் என மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒதுங்கிக் கொண்டதாக தகவலும் உண்டு.

** 1960-களில் மற்றும் 1970-களில் தேசிய மொழி இலக்கியத்தில், நம் மூத்த எழுத்தாளர்களான திரு. ஜோசப் செல்வம், திரு. என்.எஸ். மணியம் மற்றும் திரு. ஜி.சூசை ஆகியோரின் பங்களிப்பை இதில் விவரித்துள்ளார்.

காவ்ய சஸ்த்ராவின் பின் பக்கம்.எம். மகேஸ்வரன்

** 1970-களில் தேசிய மொழியை (Bahasa Malaysia) புதிய தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்துவதற்கு முன்பு ... அதாவது, 1930-களிலிருந்து 1956-ம் வரை ஜாவி (Jawi) எழுத்துத்தான் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆக, அக்காலகட்டத்தில் மலாய் மொழியை (Bahasa Melayu) எழுதிய நம் எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்களை, தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளார் இதில்.

** 1982 – 2021-ம் ஆண்டுகளுக்கிடையே தேசிய மொழி எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ள நம் எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் மற்றும் அதன் மூலம் அவர்கள் அடைந்த வளர்ச்சி போன்றவற்றை இதில் குறிப்பிட்டுள்ளார். இந்த 40 ஆண்டு வரலாற்றில், சுமார் 72 நம் எழுத்தாளர்கள் தேசிய மொழி எழுத்துத்துறையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது உறுதி கூறியுள்ளார்.

** தேசிய மொழி இலக்கிய படைப்பாளர்களில், நம் எழுத்தாளர்களில் அன்று இருந்தும் இன்று இல்லாமல் போனவர்களைப் பற்றியும் மறக்காமல் இதில் ஆவணப்படுத்தியிருப்பது சிறப்பு.

** 1985 முதல் 2019-களில் நம் எழுத்தாளர்கள் எழுதிய தேசிய மொழி சிறுகதைகளில் எவ்வகை படுத்தும் தமிழ் கலாச்சாரம் சார்த்த கதைகளை எழுதி உள்ளார்கள் என்பதையும் ஓர் ஆய்வு மேற்கொண்டு எழுதியுள்ளார்.

உத்துசான் மலேசியா பத்திரிகையில். எம். மகேஸ்வரன்

** தேசிய மொழி வளர்ச்சிக்கு, காவ்யன் இலக்கிய குழுவினரின் எவ்வகையான பங்களிப்பை மற்றும் செயல்பாடுகள் வழங்கினார்கள் என்பதையும் இதில் குறிப்பிட்டுள்ளார்.

** இந்த புத்தகத்தை எழுதி, தொகுத்து தயாரிக்க பல மாதங்கள் அவர் மேற்கொண்டதாக தெரிகிறது. அவற்றில் பல அறிவியல் ஆய்வுகள் அதாவது நம்பகரமான வட்டாரங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், உண்மையான அறிக்கைகள், அச்சு ஊடகங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள், தொலை தொடர்பு மின் ஊடகங்களான ஒன் லைன் மூலம் பெறப் பட்ட பேட்டிகள் என மேலும் பலவற்றை குறிப்பிடலாம். சுருக்கமாக கூறவேண்டுமானால் அகிபட்சமான Paper work அதாவது காகித வேலைகள் செய்துள்ளார்.

** புத்தகத்தின் உள்ளடக்கம் அனைத்தும் மலேசியா மக்கள் புரிந்துக் விளங்கிக்கொள்ளும் அளவில் எளிமையான தேசிய மொழியில் எழுதியுள்ளார்.

** காவ்ய சஸ்த்ரா நம் மலேசியர்களுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகமாகும். குறிப்பாக நம் இந்தியர்களின் தேசிய மொழி இலக்கியத்தின் பங்களிப்பு, ஈடுபாடு மற்றும் ஆளுமை போன்றவற்றை இதில் முழு ஆய்வு செய்து தரப்பட்டுள்ளது.

** இனி வரும் 50 ஆண்டுகளுக்கு இப்புத்தகத்தை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கோ அல்லது பொதுவில் ஆய்வு எடுத்துக்கொள்வதற்கோ பெரும் பயன் தரும் என்றே கருதலாம்.

சின் சியூ தினசரி பத்திரிகையில். — எம். மகேஸ்வரன்

தேசிய மொழி இலக்கியத்துறையில் கொடி கட்டி பறக்கும் நம் எழுத்தாளர்களை நாம் பாராட்டுவோம், வாழ்த்துவோம். அவர்கள் மேலும் மேலும் இத்துறையில் சிறந்து விளங்க நாம் வரவேற்போம். நாம் நினைத்தால் எதிலும் நாம் சாதிக்கலாம், சாதனை படைக்கலாம்! அதற்கு உதரணமாக திகழும் நம் எழுத்தாளர்களும் காவ்யன் இலக்கிய குழுவினருக்கு சபாஷ்!

சொன்ன நேரத்திற்கு முன்பே இப்புத்தகத்தை வெளியே கொண்டு வந்த மலேசிய தேசிய மொழி இலக்கியத்தில் கடந்த 30 ஆண்டு காலம் பழுத்த அனுபவசாலியான உதயசங்கர் எஸ்.பி-யை பாராட்டுவோம் , வாழ்த்துவோம். எம். மகேஸ்வரன் @ மெட் SENTUL

(Diambil dengan izin daripada paparan Mahesvaran Mathavarayan @ Mad Sentul di Facebook pada 14 Oktober 2021)